Sneke


ஒரு நல்ல(வனின்)பாம்பின் கதை

உண்மையைச் சொல்லபோனால் பாம்பு இனங்களில் மிகவும் நல்லவன் யாருன்னு கேட்டா , இந்த நல்ல பாம்புதான். மற்ற பாம்புகளை அடித்தாலோ, அடிக்க முயற்சித்தாலோ உடனே சீறி வந்து கடித்து விடும்.

ஆனால், நல்ல பாம்பு மட்டும்தான், சூஎன் அருகில் வராதே...’ என்று படமெடுத்து எச்சரிக்கை காட்டும்.  தொடர்ந்து, தன்னை தாக்க வருபவரை நோக்கி ஓரிரு முறை சீறி பயமுறுத்தும். இந்த எச்சரிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் அதை தாக்கினால்தான் அது நம்மை தீண்டும். மற்றபடி, அது நம்மை பார்த்தாலே, உனக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஓட்டம் பிடிக்கவே பார்க்கும்.


 நல்ல பாம்பாக இருந்தாலும், எந்த பாம்பாக இருந்தாலும் மனிதனை பார்த்துவிட்டால் ஓடி ஒளிந்து, தன் உயிரைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கும். அதுமட்டுமின்றி, நாம் அடிக்கபோய் பாம்பின் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் கூட, அதை எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மொய்க்க ஆரம்பித்து விடும்.

 அத்துடன், காயம் ஏற்பட்ட காரணத்தால் வேகமாக நகர முடியாமல் தவித்து உயிரையே விட்டுவிடும். அப்படி இருக்கும்போது, அது பழி வாங்க மீண்டும் வரும் என்பதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் கட்டி விட்ட கற்பனைக் கதையே!

மேலும், மகுடி ஊதினால் நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் என்பதை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இதுவும் தவறு. ஏனென்றால், எந்த பாம்புக்கும் காது கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி மகுடி சத்தத்திற்கு நல்ல பாம்பு மட்டும் ஆட முடிம்? அதற்கு காது என்பது வைபரேஷன்’ (அதிர்வுகள்) தான். எதிரி ஓடி வருவதை நில அதிர்வு வழியாக உணரும் பாம்பு, சட்டென்று ஓட்டம் பிடிக்கிறது. இரை வருவதையும் அவ்வாறே உணரும் பாம்பு, சட்டென்று பதுங்கி அதை கவ்விக் கொள்கிறது.

அதுசரி... மகுடி ஊதும்போது நல்ல பாம்பு ஆடுகிறதே... அது எப்படி என்று கேட்கிறீர்களா? அதற்கு காது கேட்காது என்றாலும் பார்வை தெரியும் அல்லவா? நம் கையில் இருக்கும் மகுடியும் தெரியும் தானே? அந்த மகுடியை அங்கே இங்கே என்று ஆட்டும்போது, பாம்பும் பின்தொடர்ந்து தலையை அசைக்கிறது. அது, நமக்கு பாம்பு மகுடி ஓசைக்கு ஏற்ப ஆடுவது போன்று தெரிகிறது. அவ்வளவுதான்.


கொசுரு செய்தி, மகுடி மட்டுமல்ல, கையில் சிறு குச்சியை எடுத்து, அதன் முன்பு ஆட்டினாலும், அதற்கு ஏற்ப நல்ல பாம்பு தலையை அசைந்து கொடுக்கும்.

இதனால தான் இவ ரொம்ப நல்லவ...னு சொல்லுராங்க....


linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...