LOVERSDAY

காதலர் தினம்
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதா இருந்தா.....
பெருசா ஒன்னும் செய்ய வேண்டாம்
மனசு விட்டு ஒரு தேங்ஸ் மட்டும் சொல்லுங்க...



கி.பி. 270 ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியை இரண்டாம் குளோடியஸ் (சிறீணீuபீவீus மிமி) எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். மண் மீது பேராசை கொண்ட அவன், தனது இராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களைப் போர் வீரர்களாக சேர்த்துக் கொள்ள அசை பட்டான். எனவே, திருமணம் முடிக்கவிருக்கும் இளைஞர்கள் படையில் சேர்வதை விரும்பாத அரசன், விநோதமான கட்டளையொன்றைப் பிறப்பித்தான். ""தனது ஆட்சியின் இளைஞர்கள் யாவரும் திருமணம் செய்யக் கூடாது'' என்பதே அக்கட்டளையாகும்.
இளைஞர்கள் இக்கட்டளையை மிகக் கொடூரமானது எனக் கருதினர்.
இக்கட்டத்தில், ரோம் நகரை சேர்ந்த வெலன்டைன்ஸ் என்ற கிருத்துவ மதகுரு, அரசனின் கட்டளைக்கு எதிராக இளைஞர்களுக்கு ரகசிய முறையில் திருமணங்களை நடத்தி வந்தார்.போர் வீரர்களின் காலடி ஓசை ஏதாவது கேட்கிறதா என அச்சம் கலந்த விழிப்புடனேயே வெலன்டைன்ஸ் இந்தத் திருமணங்களை நடத்தி வந்ததாகவும்.
இவ்வாறு இரகசியமாக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென அவரின் அறைக்கு வெளியே காலடி ஓசை கேட்டது. அவ்வேளையில் அறையினுள் இருந்த புதுமணத் தம்பதியினரும் வெலன்டைன்ஸும் பயத்தில்  பதறி விட்டனர். சிரமங்களுக்கு மத்தியிலும் புதுமண ஜோடிகளை தப்பிக்க வைத்து விட்டார் ஆனால் வெலன்டைன்ஸ் மாட்டிக் கொண்டார்.
அவரை சிறையில் அடைத்து விசாரணைக்கு பின், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இது வரை சொன்னது சும்மா டைட்டில் தான்
இனிமே தான் மெயின் ஸ்டோரியே இருக்கு

அதன் பின் நடந்தவைதான் சுவாரஸ்யமானது. சிறையில் இருந்த போது அவரைப் பார்ப்பதற்காக பல இளைஞர்கள் சிறைச்சாலைக்குச் சென்றனர். சென்றவர்கள் தங்கள் அன்பை வெளிபடுத்தும் விதமாக பூக்களும், வாழ்த்து அட்டைகளும் அவர் இருக்கும் அறையில் வைத்து சென்றனர்..
அவ்விதம் பூக்களை வைத்தவர்களின் சிறைச்சாலையின் அதிகாரியின் மகளும் ஒருவராவார். சிறைக்குள் சென்று வெலன்டைன்ஸைச் சந்திக்க தனது மகளுக்கும் சிறைச்சாலை அதிகாரி அனுமதியளித்திருந்தார். இதனால் பல சந்தர்ப்பங்களில் மணிக்கணக்காக இருவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடியுமுள்ளனர். மதகுருவினது மனநிலையை ஊக்குவிக்குமுகமாக அவள் பல கதைகளை அவருக்குக் கூறியும் இருக்கிறாள். அரசனின் கட்டளையையும் மீறி, அவர் நடத்தி வைத்திருந்த திருமணங்களை அவள் நியாயமானது என அவரைப் பாராட்டியுமுள்ளாள்.
இவ்வாறிருக்கையில் ஒருநாள் அவர் தூக்கிலிடப்படவே, அந்நாளன்று அவர் இருந்த சிறைச்சாலை அறையினுள், அவளுக்காக ஒரு சிறு குறிப்பையும் விட்டுச் சென்றிருந்தார். அதில், ""காதல் உனது வெலன்டைன்ஸிடமிருந்து'' என எழுதப்பட்டிருந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்தது பெப்ரவரி 14 ஆம் தேதி ஆகும்.
இந்தக் காதலர் தினத்திற்கு இச் சம்பவம் மட்டும் தான் காரணம் என்கூற முடியாது. இன்னும் பல காரணங்களும் இத்தினத்தை விழாவாகக் கொண்டாட பங்களிப்புச் செய்கின்றன.
ஆதியில் ரோம் நகரில் பிப்ரவரி 15 ஆம்தேதியன்று "லூப்ஃபகெலியா' எனும் ஒரு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாம். (பிப்ரவரி மாதமே வசந்த காலத்தின் தொடக்கமாகும்)  "லூப்பகெலியா' திருவிழாவானது ரோம் நாட்டினரின் விவசாயக் கடவுளான ஃபாவுனசையும் ரோம் அரசை உருவாக்கிய மன்னர்களான "ரொமுயுலஸ்' மற்றும் "ரெமுயுஸ்' ஆகியோரையும் வாழ்த்திப் போற்றும் வகையில் கொண்டாடப்பட்டது.
இந்த "லூப்பகெலியா' விழாவை ஆரம்பிக்கும் முகமாக, உரோமத் திருச்சபையைச் சேர்ந்த குருவானவர்கள் பலர், குகையொன்றில் கூடுவார்கள். அக் குகை பரிசுத்த குகை என அழைக்கப்பட்டது.
பிப்ரவரி 14 உலக காதலர் தினம், இந்த காதலர் தினம் ஏன் பிப்ரவரி 14 ல் கொண்டாட படுகிறது?தெரியாத காதலர்கள் படிச்சு தெரிஞ்சுக்குங்க தெரிஞ்சவங்க விட்டிருங்க..
இந்த  "வெலன்டைன்ஸ் தினம்' மெல்ல மெல்ல எவ்வாறு காதலர் தினமாயிற்று என்பது தொடர்பான சுவாரஸ்யமான சம்பவங்களும் பாரம்பரிய கதைகளுமுண்டு.
கி.பி., மூன்றாம் நூற்றாண்டில் இதற்கான ஆரம்ப செயற்பாடுகள் நிகழ்ந்தன எனக் கூறப்படுகிறது. இத்தினத்திற்கும் "வெலன்டைன்ஸ்' எனப்படும் ரோம் நாட்டை சேர்ந்த மதகுரு ஒருவரின் பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டென்பது எல்லா சரித்திரவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.


அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் இளம் கன்னிப் பெண்கள், தங்களது பெயர்களை ஒரு சீட்டில் எழுதி, பெரிய பாத்திரமொன்றில் போடுவார்கள். பின்னர் பிரம்மச்சாரிகளான இளம் ஆண்கள் அப்பாத்திரத்திலிருந்து ஒவ்வொரு சீட்டாக தேர்ந்தெடுப்பர். தங்களுக்குக் கிடைத்த சீட்டிலுள்ள பெயருள்ள பெண்ணை,  துணையாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
கி.பி. 498 ஆம் ஆண்டில் "பாப்பரசர் ஜெலசியஸ்' என்பவர் பிப்ரவரி 14 ஆம் தேதியை வெலன்டைன்ஸ் தினம் எனப் பிரகடனப்படுத்தினார். ஆயினும் சீட்டுக் குலுக்கல் மூலம் ஜோடிகளைத் தெரிவு செய்வது கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானது எனவும் அந்நாட்களில் கூறப்பட்டது. பின்னர் கி.பி. 1000லிருந்து1450 ஆம் ஆண்டளவில் பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்தவர்கள், பிப்ரவரி 14ஆம்தேதியே பறவைகள் தமது இனச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான ஆரம்ப தினம் எனப் பரவலாக நம்பினார்கள். எனவே பிப்ரவரி 14ஆம் தேதி வெலன்டைன்ஸ் தினத்தையே காதலர்கள் தினமாக மாற்ற வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்.
இக்காலத்தில்தான் காதலர் தின வாழ்த்துக்களும் தோன்றின.
அச்சுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கைகளால் எழுதப்பட்ட வாழ்த்துகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட வாழ்த்து மடல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதில் காதலர்கள் தங்களது எண்ணங்களை வெளியிட மிக எளிதாகவும் இருந்தது. தபாலில் அனுப்பப்படுவதனால் காதலை மறுக்கும் காதலியின் கடும் தாக்குதலிரு தப்பிக்கவும் மிக உதவியாக இருந்தது  மேலும் செலவு குறைவாக உள்ளதாலும் வெலன்டைன்ஸ் வாழ்த்து மடல் அனுப்புதல் வெகு பிரபலமானது.
இதாங்க. காதலர் தினத்தின் வரலாறும் கருமம் புடிச்ச  கிரிட்டிங் கார்டின் வரலாறும்.
உண்மையான காதலர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...