கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?
கடலில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு உப்பு தயாரிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் கடல் நீர் எப்படி உப்பானது என்பது பலருக்குத் தெரியாது. (நேத்து வர எனக்கும் தெரியாதுன்றது கம்பெனி)
உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றதாம். உலகின் ஆரம்பத்திலிருந்து சுமார் 0.75 பில்லியன் ஆண்டுகள் வரை பூமி குளிராமல் சூடாக இருந்தது. தண்ணீர் அனைத்தும் ஆவி ரூபமாக பூமியைச் சுற்றி மேகமாக இருந்தது.
பின்னர் ஒரு மழை.....
அதை தொடர்ந்து


பல நூற்றாண்டுகளாய் கடும் தொடர் மழை. மழை விழுவதும், பூமியில் பட்டு ஆவியாவதும், குளிர்வதும், கொட்டுவதுமாக.. கடல் தோன்றியது.
கடல் முழுவதும் நல்ல தண்ணீர்.
அடுத்த 3.25 பில்லியன் ஆண்டுகளாக கடல் ஆவியாகி மேகமாக நிலத்தில் பெய்து, ஆறாகப் பெருகி கடலில் கலந்து, இதே போல் பல கோடி முறை திரும்பத் திரும்ப நடந்ததால் கடல் நீர் நிலத்தின் அரிமானத்தால் உவர்ப்புடையதாக மாறிவிட்டது. இதை நான் சொல்லலங்க. அறிவியல் அறிஞர்கள்  சொல்லியதுதாங்க....

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...