தனித்துவமிக்க தமிழர் கலாச்சாரம்


உலகில் எத்தனையோ நாடுகள், அதில் எத்தனையோ மொழிகள், கலாச்சாரங்கள்....
“கல்தோன்றி, மண்தோன்றா காலத்திற்கு
முன் தோன்றியது எம் தமிழ்மொழி” என்று கூறி கொள்வதில் நாம் கர்வம் கொள்ளலாம்...
தமிழ் சாரா தமிழ் கற்ற பிற மொழியுடையவரும் இது கொண்டு பெருமை கொள்ளலாம்...
இன்று ஆதிக்கம் கொண்டுள்ள ஆங்கிலம் மட்டுமல்ல... அண்டங்களில் பேசும் அனைத்து மொழிகளிலுமே இல்லாத தனித்துவம் தமிழுக்கு உண்டு. தமிழுக்கு மட்டுமே உண்டு...

கலப்படம் மிக்க இந்திக்கு கொடுத்த முன்னுரிமையை, காற்றையும் தீண்டும் தமிழுக்கு ஏன் தரவில்லை....

அது தமிழில் பிறந்த கீழ்தர மனிதர்களால் ( கீழ் தர மனிதன் என குறிப்பிட்டது சாதியாலோ, அல்லது வேறு பிரிவினை சம்பந்தமான வார்த்தைகளையோ அல்ல. தானும் தன் குடும்பமும் வாழ தன் இனத்தையே காவு கொடுக்க  சம்மதம் தரும் ஒரு விலங்கினத்தை) தான்.
சரி இனி...
உலகில் குறிப்பிடத்தக்க மொழிகளில் பிறறை ஒரு நாளில் முதல் தடவை பார்த்தவுடன் கூறும் வார்த்தைகள்

(தமிழில் மொழி மாற்றப்பட்டு )காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம், இன்னும் கூடுதலான பாசத்தில்... ஆஹா என்ன ஆச்சர்யம்., ஓ கடவுளே, உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,  இந்த நாள் இனிதாக உங்களுக்கு அமையட்டும். இது போல இன்னும் சில .. பல..

ஆனால் தமிழ் மொழியில், நம்ம ஊருகாரங்க....

என்ன சாப்டாச்சா? வாங்க? வாங்க? தண்ணீர் குடிங்க?  வீட்டில எல்லாரும் சவுக்கியமா?
எடுத்துக்காட்டுக்கு இந்த வார்த்தைகள் மட்டுமே போதும் என நினைக்கிறேன்.

மற்ற மொழியவர்களை நான் குறை கூறவில்லை, அவர்களுக்கு அவர்கள் முன்னோர்கள் சொல்லி கொடுத்த வார்த்தைகள் அப்படி? பாசம் அன்பு போன்றவற்றை மற்றவர்களிடம் காட்ட அவர்களுக்கு வார்த்தைகள் அவ்வளவாக இல்லை,

 ஆனால் தமிழில் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு உச்சரிப்பு....
“உபசரிப்புக்கும், விருந்தோம்பலுக்கும்  தமிழகமும், தமிழர்களும்தான் பெஸ்ட்” என்கிறது ஒரு   மேல்நாட்டு பல்கலை கழக ஆய்வாளர்களின் ஆய்வு.
இப்படிபட்ட தமிழையும் பாச வார்த்தைகள் முதற்கொண்டு பலவற்றை  ஆபாச வார்த்தையாக மாற்றிவிடுகின்றனர்.

(எகா) நாடாவை அவிழ்த்து பாவாடையை தூக்கி பார் திராவிடம் தெரியும் என (என்று) ஏரோ தமிழக தலைவர்  (சட்டமன்றத்திலேயே) கூறியதாக ஒரு செவி, புத்தக வழி செய்தி கூட கூறலாம்.
இதை கேட்டவுடன் நினைக்க தூண்டுவது எதையோ?
ஆனால் அந்த தல கூறிய விளக்கமோ.....
நாடா என்றால் ( பைல் கட்டப்படும் நூல்) பாவாடை என்பது பைலை மூடும் அட்டை பாவடை துணியால் செய்யப்படுகிறது எனவும் அதைதான் தூக்கு அதனுள்ளே என் சம்பந்தப்பட்ட குறிப்பேடு உள்ளது அதை படித்து பார் அப்போது திராவிடம் தெரியும் என கூறியுள்ளார்....
( என்ன வௌக்கமடா சாமீ)
இந்தனை பெருமைக்குறிய தமிழை பிறர் கற்றுக்கொள்ள விரும்பினாலும் இலவசமாக கற்றுக்கொடுக்க  தன்னார்வ தமிழர்கள் தயாராக இருந்தாலும் அதற்கும் காசு வாங்க ஒரு கூட்டம் சுற்றி வருகிறது (தெருநாய் பொளைப்பு)
தமிழை வளர்கிறோம் பேர்வழி;  பிற மொழியை எதிர்கிறோம்,
வெளிநாட்டிலுள்ள தமிழர்களால்தான் நம்ம நாட்டு பொருளாதாரமும், கலாச்சாரமும் பாதிக்கப்படுகிறது என்கிறது ஒரு எச்சக்கல கூட்டம்



தமிழ் ஜிஎம்எஸ் தளத்திற்காக
எழுத்தாளர் ஸ்ரீவை பிரியன்
உடன்
தமிழ்-க- மூர்த்தி

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...