உலகில் எத்தனையோ அதிசயங்கள்... அற்புதங்கள்... இன்றும் புரியாத புதிராக எத்தளையா திகில் கலந்த அதியசங்கள். குறிப்பாக கூறப்போனால் நமது பத்திரிக்கை நிருபர் ஸ்ரீவைபிரியன் அவர்களின் பெர்முடா முக்கோணம் பற்றிய முந்தைய பதிவை கூட கூறலாம்.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா என மூன்று கண்டங்களும் கூடும் இடத்தில் உள்ள எகிப்திற்கும், பிரமீடுகளுக்கும் தான் இந்த பதிவு.
நைல்நதி, மம்மிகளின் பிரமீடுகள், உலக அழகி கிளியோபாட்ரா என எகிப்தின் புகழுக்கு புகழ்சேர்ந்தவை, சேர்த்தவர்கள் ஏராளாம்.
வறண்ட மேற்கு மற்றும் கிழக்குப் பாலைவனங்களில் இருக்கும் இதன் பெரும்பான்மையான நிலப்பகுதி, நாட்டின் முதன்மை அம்சமான நைல் ஆற்றால் பிரிக்கப்படுகிறது. சுமார்16 கி.மீ அகலத்திற்குத் தட்டையான சமதளப்பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. கெய்ரோவுக்கு வடக்கே மக்கள் தொகை அதிகமுள்ள தாழ்நிலை முகத்துவாரப் பகுதியில் இந்தப் பள்ளதாக்கு விரிகிறது.  ஏறத்தாழ நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு நாகரிகம் செழித்து வளர்ந்து, மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது என்பதற்கு ஆதராங்கள் கிடைத்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக நிமிர்ந்து நின்று, நம்மை அண்ணாந்தும் அதிசயப்படும் வகையிலும் பார்க்க வைத்துக் கொண்டு இருக்கும் பிரமிடுகளே இதற்கு அசைக்க முடியாத சாட்சிகள். எகிப்து நாட்டின் அடையாளச் சின்னம்போல, தலையில் இருந்து தோளின் இரண்டு புறமும் சரிந்து கொண்டு இருக்கும் கவச உடையுடன் கம்பீரமாக ஒரு உருவம் காட்டப்படுகிறது. அது - மாமன்னர் ரம்ஸேஸ்-2. என கூறுகின்றனர்.
பிரமீடுகளில் உள்ளவை மம்மீகள் எனப்படும் பூத உடல் கள் என்பது உங்களுக்கு தெரிந்த சேதிதான்.
சரி இந்த மம்மீயை பற்றிய எனக்கு(ம்) தெரிந்த விஷயங்களையும் இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
எகிப்தீயர்கள் கடவுள் நம்பிக்கை மிக்கவர்கள்... மேலும் மரணத்திற்கு பின்னும் ஒரு வாழ்வு உண்டு! என்றும் நம்புகின்றனர். ஒருவர் மரணம் அடைந்த பின் அவர் வேறு உலகிற்கு(எனக்கு இது சரியாக சொல்லத் தெரியவில்லை) செல்வதாகவும். அப்போது அவர்கள் தங்கள் பூத உடலை பற்றிய கவலை வர கூடாது என்பதாலும் அந்த உடல் பதப்படுத்தபட்டு பத்திரப்படுத்தப் படுகிறது. இவ்வாறு அந்த நபரின் உடல் பாதுகாக்கப்படவில்லை எனில் அவர்கள் கவனம் உடலின் மீது வருவதாகவும் அவர்கள் வேறு உலகம் செல்லும் பாதை மாறி இங்கேயே சுற்றி வருவதாகவும் நம்புகின்றனர்.
உடல் பதப்படுத்தப்படுத்தும் செயல் அனைத்து மக்களுக்கும் பொருந்தாது.இதற்கு அதிக செலவு ஏற்படும்.   மன்னர் வம்சத்தினர் மற்றும் பெரும் செல்வந்தனர் ( நம்ம ஊரு அரசியல் கிராக்கிகள் போன்றவர்கள்) ஆகியோரால்தான் தங்கள் வம்சத்தினரின் உடலை பதப்படுத்தி மம்மீகளாக மாற்றி வேறு உலகம் செல்ல வைக்க முடியும்.
இனி  பூத உடல்களை மம்மீகளாக மாற்றும் முறையை பார்க்கலாம்.....
1. இறந்தவரின் உடல் கையகப்படுத்தப்பட்டு  நைல் நதியில்  கழுவப்பட்டுகிறது. ( பாவங்கள் கலையப்பட்டு புன்னியம் கிடைக்குமாம்)
பின்பு உடலில் உள்ள நுரையீரல், கல்லிரல், குடல் உள்பட  உறுப்புகளை நீக்குகின்றனர்.
இதயம் மட்டும் இதில் விதிவிளக்கு இதனை உடலில் இருந்து எடுக்க மாட்டார்கள். காரணம் இதயம்தான் அந்த உயிருக்கு அறிவையும் மற்றும் செயல்படும் முறையையும் காட்டுமாம் ( பாடி ஆன பிறகுமாடா செயல் படுது )
அடுத்ததாக முளையை எடுக்கின்றனர். இதனை மூக்கு துவாரத்தின் வாயிலாக சிறிய செம்பு கம்பியின் உதவியுடன்  குத்தி உடைத்து வெளியே எடுக்கின்றனர். (மூளை நம்ம ஊரு ஆஃப் ஆயில் மாதிரி தான் இருக்குன்னு எனக்கு தெரிந்த ஒரு டூபாக்கூர் டாக்டர் சொல்லிருக்காரு)
பின்னர் மீண்டும் நைல் நதியில் கழுவப்பட்டு  உடலில்  அதாவது வலதுபகுதியின் வழியாக கல் உப்புகளை வைக்கின்றனர்.
பின்னர் இருக்கமான வெள்ளை துணியால் கட்டப்பட்டு மரப்பெட்டியில் வைத்து மூடிப்படுகிறது.
( இப்போது நாம எதிர்பார்த்த சூப்பரான மம்மீ ரெடி)
எக்ஸ்ட்ரா ஒரு தகவல்:- மம்மீகளுடன்  நகைகள், மற்றும் பொருட்களும் வைத்ததான் பிரமீடுகளில் வைப்பார்களாம்.
ஆனால் இப்போதுள்ள பிரமீடுகளில் உள்ளவற்றில் உள்ள பொருட்கள் எல்லாம் முன்னரே திருடர்களால் கலவாடப்பட்டும், இப்போதுள்ள ஆராய்சியாளர்களால் (அரசு சார்பாக?) கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...