கசக்கும் காதல் கல்யாணம்

பெரும்பாலும் காதல் திருமணங்கள் செய்யும் தம்பதிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர் ஏன்? இந்த சூழ்நிலை!
பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் காதல், காமம் உள்ளிட்ட ஆசை,பாசங்கள் உண்டு என்பது அறிவு பூர்வமான உண்மை (தாவரங்கள் உள்பட) பெரும்பாலும், விலங்கினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் தங்கள் உறவுகளை வெளிப்படையாகவே நடத்துகின்றன. இவற்றில் மனித இனம் மட்டும் உடல் உறவை மறைவாகவே வைத்துக் கொள்கிறார்கள்...  இதற்கு காரணம் பலவாக இருந்தாலும் முதல் மூல காரணம் அவனின் ஆறாவது அறிவு, இதுதான் மனிதனுக்கு, கோபம், பொறாமை, தாழ்ப்புனர்ச்சி, ஆசைகள் என எல்லாவற்றிகும் காரணம்.
மனிதனின் பரினாம வளர்ச்சியால் அவன் தன்னை மற்றவற்றிலிருந்து உயர்த்தி கொள்ள ஆசைபட்டான். அடைந்தும் விட்டான். பின்னர் தன் இனத்திலேயே தான் தான் பெரியவன் என்று எல்லாராலும் பாராட்டபடவேண்டும், அனைத்தும் தனக்கு அடிமையாக வேண்டும் எனவும் அசைபட்டான்.
இங்கிருந்துதான் பெண்ணடிமைத்தனம் முதற்கொண்டு  சாதியடிமைத்தனம் வரை ஆரம்பிக்கலானது.
இன்றைய மனிதனின் காதல் டூ கல்யாணம்
ஒரு பெண் ஒரு ஆண்மகளை பார்க்கும் போது இவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையின் காரணத்தாலே அவன் மீது காதல் கொள்கிறாள். அந்த காதல் அவனின் உள்ளத்தையும், உணர்வையும் முதலில் பார்ப்பதில்லை.
சில காலங்கள் சென்ற பிறகு எல்லாம் ஓகே. இனி கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக பயணிப்போம் என்ற சூழ்நிலை வருகிறது...
இதுவரை( திருமணத்திற்கு முன்) காதலி காதலனை மினிமம் காலை 9 மணிக்கு மேல்தான் பார்க்க வாய்ப்பிருந்திருக்கும், இதே காரணம்தான் காதனனுக்கும் எனவே இவர்களுடைய பாசிட்டிவ் முகங்களையே பார்க்க வாய்ப்பிருந்திருக்கிறது. இவர்களுடைய நெகடிவ் முகமான  தூங்கி எழுந்தவுடன் இருக்கும் முக லட்சனத்தை இருவரும்  ஒருவொருக்கொருவர் பார்க்க வாய்ப்பில்லை.
திருமணத்திற்கு பின்  ஒன்றாக தூங்கி எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் போது அய்யயய்ய இந்த முஞ்சியவா நாம காதலிச்சோம். என்ற எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது இருவருக்கும் உள்ள நெருக்கம்.
இரண்டாவதாக..... காதலியோ அல்லது காதலனோ தங்கள் துணையை பார்க்கும்போது வெளியே எவ்வளவு கோபம் இருந்தாலும் அவர்களை பார்த்து கோபத்தை வெளிகாட்டிக்கொள்வதில்லை.... மாறாக ஒரு ரொம்..மான்டிக் லுக்,குதான் விடுவாங்க.
ஆனால் கல்யானத்திற்கு பின் எங்கேயோ உள்ள கோபத்தையெல்லாம் தனது முன்னாள் கதலி அல்லது காதலனிடமோ ( இன்றைய மனைவி, கணவர்) தான் வெளிகாட்டப்படுகிறது.
அன்று வெறும், சந்தோசத்தையும், ஆறுதலையும் தந்த காதலன் இன்று கணவன் ஆன பின் அதற்கு நேர் மாறாக   இருக்கிறானே என்ற ஆதங்கம் பிறக்கிறது. இது அவர்களுக்கிடையே உள்ள விரிசலை மேலும் பலமடைய செய்கிறது.

இப்படி துணையின் பாசிட்டிவ் கேரக்டரில் பார்த்தவர்கள் நெகடிவ் அவர்களின் நெகடிவ் கேரக்டர்களை பார்க்கும்போது அவர்களின் பிரிவுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

சோ... உங்க லவ்ஸின் மூஞ்சிய காலைல போய் கண்டிப்பாக பாருங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்...
யாருக்கு?
யாருக்கோ.......?



தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக
தென் தமிழகத்திலிருந்து
செய்தியாளன்
ஸ்ரீவைபிரியன்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...